Never Split the Difference (Tamil)

Manjul Publishing
Ebook
320
Pages

About this ebook

முதலில் ஒரு காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கிறிஸ் வாஸ், பின்னர் எஃப்பிஐயில் சேர்ந்தார். அங்கு அவர், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர், வங்கிக் கொள்ளையர், தீவிரவாதிகள், பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருப்பவர்கள் போன்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்நூலில், அவர் தன் தொழில்வாழ்க்கையில் எதிர்கொண்ட சுவாரசியமான பல பேச்சுவார்த்தைகளைச் சுவைபட எடுத்துரைக்கிறார். அவற்றில் அவருக்கு வெற்றிகரமாகக் கைகொடுத்து உதவிய ஒன்பது கொள்கைகளை அவர் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அப்பாவி மக்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த சமயங்களில் அவர் இவற்றைப் பிரயோகித்து வெற்றி கண்டிருந்தார். இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் எதிர்கொள்கின்ற எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உங்களுடைய கை மேலோங்கி இருக்கும் என்பது உறுதி.
முதலில் ஒரு காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கிறிஸ் வாஸ், பின்னர் எஃப்பிஐயில் சேர்ந்தார். அங்கு அவர், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர், வங்கிக் கொள்ளையர், தீவிரவாதிகள், பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருப்பவர்கள் போன்றோருடன்...

About the author

கிறிஸ் வாஸ் 24 ஆண்டுகள் எஃப்பிஐ அமைப்பில் பணியாற்றியுள்ள கிறிஸ் வாஸ், பேச்சுவார்த்தைக் கலையில் ஒரு வல்லுநராகக் கருதப்படுகிறார். அவர், ‘த பிளாக் ஸ்வான் குரூப்’ என்ற ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். பெருநிறுவனங்கள் பிரம்மாண்டமான மற்றும் சிக்கலான வணிகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அந்நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும், அவற்றின் ஊழியர்களுக்குப் பயிற்சிகளையும் அவருடைய நிறுவனம் அளித்து வருகிறது. கிறிஸ் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பகுதிநேர உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றியுள்ள கல்வி நிறுவனங்களில், ஹார்வர்டு பல்கலைக்கழகம், எம்ஐடியின் ஸ்லோன் வணிகப் பள்ளி, சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்ஷல் வணிகப் பள்ளி, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் மெக்டோனோ வணிகப் பள்ளி, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் வணிகப் பள்ளி ஆகியவையும் அடங்கும்.


தால் ராஸ் தால் ராஸ் பல விருதுகளை வென்றுள்ள ஓர் எழுத்தாளர். அவர் பல நூலாசிரியர்களுக்கு இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘நெவர் ஈட் அலோன்’, ‘மில்லியன் டாலர் வீக்கென்ட்’, ‘சிஇஓ நெக்ஸ்ட் டோர்’ போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அத்துடன், அவர் பெருநிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்தும் வருகிறார். அவர் பல நிறுவனங்களின் வெளியீடுகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ் வாஸ் 24 ஆண்டுகள் எஃப்பிஐ அமைப்பில் பணியாற்றியுள்ள கிறிஸ் வாஸ், பேச்சுவார்த்தைக் கலையில் ஒரு வல்லுநராகக் கருதப்படுகிறார். அவர், ‘த பிளாக் ஸ்வான் குரூப்’ என்ற ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். பெருநிறுவனங்கள் பிரம்மாண்டமான மற்றும் சிக்கலான வணிகப் பேச்சுவார்த்தைகளை நடத்து...

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.