சரஸ்வதி சம்மான் விருது மட்டுமின்றி, சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதான ரஜத் கமல் விருதையும் தன் திரைப்பாடலுக்காகப் பெற்றவர்.
முழுமையான படைப்பாளுமைக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, பல இலக்கிய அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனப் பலவற்றால் கெளரவிக்கப்பட்டவர் மாலன். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் ஃபெல்லோ என்ற சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர், தமிழர்.
இவரது படைப்புகள், ஆங்கிலம், பிரன்ச், சீனம், மலாய், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மெல்பெர்ன் பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (சிங்கப்பூர்) மலேயா பலகலைக்கழகம் (மலேசியா) பெய்ஜிங் அயலக ஆய்வுப் பல்கலைக்கழகம் (சீனம்) ஆகிய பல்கலைக் கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். சிங்கப்பூர், மலேசியா, சீனம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்.
தமிழகத்தின் முன்னணி இதழ்கள், தமிழின் முதல் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சி ஆகியவாற்றை ஆசிரியராக வழி நடத்தியவர்.
தனித்துவமான பானியில் தமிழில் வித்தியாசமான படைப்புக்களை வழங்கி வருபவர்.