Aval Appadithaan

· Pustaka Digital Media
Ebook
260
Pages

About this ebook

உலுத்தாத மொழி நடை, தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், அதுவே உண்மை மிக்க ஓர் எளிய மொழி நடையில் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன. வாசக மனதில் ஒரு சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்வது, ஒரு சிறிய அழுக்கைத் துடைத்தல், ஒரு சிறிய சோகம் கவிழச் செய்தல், ஒரு வெளிச்ச நினைவு மின்னி மறைதல், ஆனால் எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை, உயிர் வடிவமாகக் கொண்டுள்ளது என்பதே மெய். எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத தனி மனிதர் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில் அவரது படைப்புக்கள் எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனிதநேயச் சிறுகதைகளாகவே இயல்பாகவே அமையும் என்பதற்கு உஷாதீபன் படைப்புக்களே சான்று.
உலுத்தாத மொழி நடை, தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், அதுவே உண்மை மிக்க ஓர் எளிய மொழி நடையில் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன. வாசக மனதில் ஒரு சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்வது, ஒரு சிறிய அழுக்கைத் துடைத்தல், ஒரு சிறிய சோகம் கவிழச் செய்தல், ஒரு வெளிச்ச நினைவு மின்னி மறைதல், ஆனால் எல்ல...

Discover more

About the author

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, நிலைத்தல், முழு மனிதன், பின்னோக்கி எழும் அதிர்வுகள், சில யதார்த்தங்கள் வனம் புகுதல், தனித்த பறவையின் சலனங்கள் ஆகிய 18 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால்விலங்கு, துருவங்கள், எதிர்காற்று ஆகிய ஆறு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள்,காலத்தால் அழியாக் கலைஞர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்,மற்றும் நகைச்சுவைக் கலைஞர்கள் பற்றிய உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், உறங்காக் கடல், படித்தேன்எழுதுகிறேன், பொங்குமாங்கடல் ஆகிய மூன்று இலக்கியக் கட்டுரைத் தொகுப்பும், இவை போக 30 மின் நூல்களும், புஸ்தகா.கோ.இன்-ல் நாவல்களும், சிறுகதைகளும் ஆக இருபது நூல்களும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல கல்லூரிகளில் மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

இவரது எழுத்துப்பணி வார மாத இணைய இதழ்களில் இன்றும் விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல்...

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.