ஆலிவர் பர்க்மேன் ஒரு பிரபல பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியர். பிரிட்டனில் வெளிவரும் ‘கார்டியன்’ பத்திரிகையில் ‘இது உங்களுடைய வாழ்க்கையை மாற்றும்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் வெளியாகிக் கொண்டிருந்த உளவியல் கட்டுரைகளை அவர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வந்தார். அவருடைய கட்டுரைகள், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், சைக்காலஜீஸ், நியூ ஃபிலாசஃபர் ஆகிய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. ‘த ஆன்டிடோட்: ஹேப்பினஸ் ஃபார் த பீப்பிள் ஹு கான்ட் ஸ்டேன்ட் பாசிட்டிவ் திங்கிங்’ என்ற பிரபலமான நூலையும் அவர் எழுதியுள்ளார். அந்நியப் பத்திரிகைக் கூட்டமைப்பு ஆண்டுதோறும் வழங்குகின்ற இளம் பத்திரிகையாளர் விருதை அவர் ஒரு முறை பெற்றுள்ளார். பெரிதும் மதிக்கப்படுகின்ற ஆர்வெல் விருதுக்கு 2006 இல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஆறு கட்டுரைகளில் அவருடையதும் இடம்பெற்றிருந்தது.