Sales Management (Tamil)

Manjul Publishing
Е-книга
169
Страници

За е-книгава

ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • விற்பனைச் சாம்பியன்களை முதலிலேயே அடையாளம் கண்டு அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி • ஒரு தெளிவான விற்பனைத் திட்டத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி • தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஊக்குவிப்பின் மூலம் வெற்றிகரமான விற்பனையாளர்களை உருவாக்குவது எப்படி • விளைவுகளை மதிப்பிடுவது எப்படி • ஒரு முன்னுதாரணமாக விளங்குவதன் மூலம் தலைமையேற்று நடத்துவது எப்படி இப்போதே தொடங்கி உங்களுடைய விற்பனைப் படைக்கு உத்வேகமூட்டுங்கள், விற்பனையைப் பன்மடங்கு பெருக்குங்கள், உங்களுடைய தனிப்பட்டப் பதவி உயர்வுகளைப் பெறுங்கள்.
ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள...

За авторот

உலகில் இன்று தலைசிறந்த வியாபாரப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அவருடைய விண்ணளவு சாதனை, சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள், சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள், இலக்குகள், காலை எழுந்தவுடன் தவளை ஆகிய சில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. 

உலகில் இன்று தலைசிறந்த வியாபாரப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களி...

Оценете ја е-книгава

Кажете ни што мислите.

Информации за читање

Паметни телефони и таблети
Инсталирајте ја апликацијата Google Play Books за Android и iPad/iPhone. Автоматски се синхронизира со сметката и ви овозможува да читате онлајн или офлајн каде и да сте.
Лаптопи и компјутери
Може да слушате аудиокниги купени од Google Play со користење на веб-прелистувачот на компјутерот.
Е-читачи и други уреди
За да читате на уреди со е-мастило, како што се е-читачите Kobo, ќе треба да преземете датотека и да ја префрлите на уредот. Следете ги деталните упатства во Центарот за помош за префрлање на датотеките на поддржани е-читачи.