குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறீர்கள், கடைக்குள் நுழைவதற்குமுன் அப்பா ஓர் ஏடிஎம்முக்குள் நுழைந்து அட்டையைச் செருகுகிறார். ஏதோ பொத்தான்களை அழுத்துகிறார். சரேலென்று காசு வருகிறது. அதை வைத்துச் செலவு செய்கிறார். ஆனால், அந்தக் காசு எங்கிருந்து வந்தது? ஏடிஎம் என்பது பணம் அச்சடிக்கும் இயந்திரமா? யார் எவ்வளவு கேட்டாலும் அது கொடுத்துவிடுமா?ஏடிஎம் பணத்தை அச்சடிப்பதில்லை, அதற்குள்ளே வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துத் தருகிறது.
அதுவும் சும்மா தராது. நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான் தரும். இல்லாவிட்டால் மறுத்துவிடும். அதென்ன வங்கிக் கணக்கு? அதில் பணம் எப்படி வந்தது? ஒருவேளை பணம் இல்லாவிட்டால் என்ன செய்வது? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி ஒவ்வொருவருக்கும் சென்று சேர்கிறது?
இந்த நூலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேடலாம். வாருங்கள்!
என்றும் அன்புடன்,
என். சொக்கன்.
குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறீர்கள், கடைக்குள் நுழைவதற்குமுன் அப்பா ஓர் ஏடிஎம்முக்குள் நுழைந்து அட்டையைச் செருகுகிறார். ஏதோ பொத்தான்களை அழுத்துகிறார். சரேலென்று காசு வருகிறது. அதை வைத்துச் செலவு செய்கிறார். ஆனால், அந்தக் காசு எங்கிருந்து வந்தது? ஏடிஎம் என்பது பணம் அச்சடிக்கும் இயந்திரமா? யார் எவ...