அக் ஷத் குப்தா, ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது பாலிவுட்டில் ஒரு திரைக்கதாசிரியராக நன்றாகக் காலூன்றியுள்ள அவர், ஒரு கவிஞரும் திரைப்பாடலாசிரியரும்கூட. ‘மறைந்திருக்கும் இந்து’ என்ற, மூன்று பாகங்களைக் கொண்ட இப்புத்தகத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்து, இதை ஆங்கிலத்திலும் இந்தியிலும் அவர் எழுதியுள்ளார். சட்டிஸ்கரில் பிறந்த அவர், மத்தியப் பிரதேசத்தில் வளர்ந்தார். இப்போது அவர் மும்பையில் வசித்து வருகிறார். அவரை நீங்கள் authorakshatgupta என்ற இன்ஸ்டாகிராம் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் அணுக வேண்டிய முகவரி: akshat.gupta0204@gmail.com.