A Deadly Affair (Tamil)

· Manjul Publishing
E‑kniha
369
Stránky

Podrobnosti o e‑knize

காதலால் நம்மைப் பெரும் உச்சங்களுக்கு உந்தித் தள்ளவும் முடியும், இருண்ட அதலபாதாளங்களுக்குள் தள்ளிவிடவும் முடியும். இச்சிறுகதைத் தொகுப்பில், காதல் போதையில் நிகழ்கின்ற குற்றங்கள், இதயங்கள் ஆடுகின்ற சதி விளையாட்டுகள், பயங்கரமான நயவஞ்சகங்கள் போன்ற, காதலின் இருண்ட பக்கங்களை அகதா கிறிஸ்டி நம் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். உங்கள் இதயத்துடிப்பை எகிற வைக்கின்ற இக்கதைகளில் பொதிந்திருக்கும் மர்மங்களையும் புதிர்களையும் விடுவிப்பதற்கு, உங்களுக்குப் பரிச்சயமான துப்பறிவாளர்களான ஹெர்கியூல் புவாரோ, மார்ப்பிள், உண்மையைத் தோலுரிப்பதற்காகக் கபட நாடகம் ஆடுவதில் வல்லவரான பார்க்கர் பைன், புதிராகத் தோன்றிப் புதிராக மறைகின்ற ஹார்லி குயின், சாகசங்களை விரும்புகின்ற தம்பதியரான டாமி மற்றும் டப்பென்ஸ் ஆகியோர் அணிவகுத்து வருகின்றனர். ஒரு முக்கோணக் காதலில் மாட்டிக் கொண்ட ஒரு பெண்ணைத் தீர்த்துக் கட்ட ஒரு காதலன் மேற்கொண்ட குயுக்தியான முயற்சி; தீய நோக்கங்களை மறைப்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுவாரசியமான விளம்பரம்; குற்றம் நிகழ்வதற்கு முன்பே சந்தேகத்திற்கு இடமானவர்களை இனம் காணுகின்ற வித்தை போன்றவை இதில் இடம் பெற்றுள்ள சில கதைகளின் கதைக்களங்கள். ஒட்டுமொத்தத்தில், அகதா கிறிஸ்டியின் இரசிகர்களுக்கு ஓர் அருமையான விருந்து இத்தொகுப்பு.
காதலால் நம்மைப் பெரும் உச்சங்களுக்கு உந்தித் தள்ளவும் முடியும், இருண்ட அதலபாதாளங்களுக்குள் தள்ளிவிடவும் முடியும். இச்சிறுகதைத் தொகுப்பில், காதல் போதையில் நிகழ்கின்ற குற்றங்கள், இதயங்கள் ஆடுகின்ற சதி விளையாட்டுகள், பயங்கரமான நயவஞ்சகங்கள் போன்ற, காதலின் இருண்ட பக்கங்களை அகதா கிறிஸ்டி நம் கண்முன் பட...

Zjistit více

O autorovi

1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்தன. இன்றைய நிலவரப்படி, அவருடைய நூல்கள் உலக அளவில் ஆங்கிலத்தில் 100 கோடியும், 100 அந்நிய மொழிகளில் இன்னொரு 100 கோடியும் விற்பனையாகியுள்ளன. ஹெர்கியூல் புவாரோ, மிஸ் மார்ப்பிள் ஆகிய அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் உலகம் நெடுகிலும் பரிச்சயமானபோதிலும், இந்த ‘மர்மக்கதைகளின் மகாராணி’ தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தவிர மற்ற அனைவருக்கும் புரியாத ஒரு புதிராகவே விளங்கினார்.

1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக...

Ohodnotit e‑knihu

Sdělte nám, co si myslíte.

Informace o čtení

Telefony a tablety
Nainstalujte si aplikaci Knihy Google Play pro Android a iPad/iPhone. Aplikace se automaticky synchronizuje s vaším účtem a umožní vám číst v režimu online nebo offline, ať jste kdekoliv.
Notebooky a počítače
Audioknihy zakoupené na Google Play můžete poslouchat pomocí webového prohlížeče v počítači.
Čtečky a další zařízení
Pokud chcete číst knihy ve čtečkách elektronických knih, jako např. Kobo, je třeba soubor stáhnout a přenést do zařízení. Při přenášení souborů do podporovaných čteček elektronických knih postupujte podle podrobných pokynů v centru nápovědy.